Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

தில்லி போலீசின் லட்சணம்!

&posturl=http://thirumozhian.blogspot.com/2006/09/blog-post_20.html&cmt=2&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">

ஆள்வோரின் அடிவருடிகளாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் தில்லிப் போலீசார். பொதுமக்களுடனான தில்லிப் போலீசாரின் சட்டாம்பிள்ளைத் தனமான போக்கு நாம் நன்கறிந்ததே. அரியானாக்காரர்கள் அதிகமாகக் காவல்துறையில் இருப்பது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. குர்காவ்னில் அரியாணா போலீஸ்காரர்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதமே இதற்குச் சாட்சி. (கொலை கொள்ளைக்காரர்களிலும் அரியானாக்காரர்களின் சதவீதம் அதிகமைய்யா!)

அரசியல்வாதிகளிடம் நயமாக நடந்துகொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தில்லி காவல்துறைக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அதை நூறு சதவீதம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளும் தில்லிப் போலீசார் அரசியல்வாதிகள் பொதுமக்களின் ரெப்ரெசென்டேட்டிவ்கள் என்று வேறு சப்பைக்கட்டுக் கட்டிஇருக்கிறார்கள். இதுவரை தில்லிப் பணக்காரர்களின் கறுப்புத்தொழில்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்துவரும் தில்லிப் போலீசார் (ஆதாரம் : கண்துடைப்பு ஆக்கிரமிப்பு இடிப்புகளும் தில்லி நீதிமன்றம் அதுபற்றி வெளியிட்ட அதிருப்தியும். என்னதான் மாநகராட்சி காரணமென்றாலும், காவல்துறையின் முழு ஒத்துழைப்பு அனைத்து அட்டூழியங்களிலும் உண்டு. ), இனி முன்னைவிட நன்றாக அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறிந்துவிடப் போகிறார்கள்.

தில்லித் தனியார் பேருந்துகளில் இரண்டு ரூபாய்க்கு டிக்கட் எடுக்க வக்கில்லாது "முஜே மந்த்ரி பதா ஹே" (எனக்கு மந்திரியைத் தெரியும்) என்று கண்டக்டரை மிரட்டும் சல்லித்தனமானவன் இனித் தன் குரலை ஓங்கி ஒலிக்கப் போகிறான்.

ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்றது.
யாருக்கும் வெட்கமில்லை!

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

well written.

6:13 AM  

Blogger மங்கை said...

///தில்லித் தனியார் பேருந்துகளில் இரண்டு ரூபாய்க்கு டிக்கட் எடுக்க வக்கில்லாது "முஜே மந்த்ரி பதா ஹே" (எனக்கு மந்திரியைத் தெரியும்) என்று கண்டக்டரை மிரட்டும் சல்லித்தனமானவன் இனித் தன் குரலை ஓங்கி ஒலிக்கப் போகிறான்///

திருமொழியான்..

ரெண்டுபதிவும் அருமை..
இங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தர்
10 வருசத்துக்கு முன்னால traffic police ல வேலை பார்த்தாராம்.. அதுவும் 6 மாசந்தான்.. ஆனா அந்த ID card இனும் வச்சுட்டு, டிக்கெட் இல்லாம போயிட்டு இருக்கார்.. நம்ம தமிழ்காரர்தான்...

நீங்க சொன்ன மாதிரிதான்

//ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்றது.
யாருக்கும் வெட்கமில்லை//

போலீஸ்காரங்க மட்டும் இல்லை, பொது மக்கள் கூட பஸ்ல டிக்கட் எடுக்க
காட்டும் தயக்கத்தை கண்டு நான் ஆச்சிரியபட்டுஇருக்கேன்.. நடத்துனர் வந்து டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டா, மெதுவா அதுக்கு அப்புறம் யோசிச்சு பாக்கெட்டுல இருந்து காசெடுத்து கொடுப்பாங்க.. அப்படியே டிக்கெட் எடுத்தாலும், அதுல பேரம் பேசி, நான் இவ்வளவுதான் குடுப்பேனு சண்டை போடறத பார்க்கலாம்.. இப்படியும் ஒரு ஊரானு இருக்கு..

2:46 AM  

Post a Comment

<< முகப்பு